முதல்வர் ஸ்டாலின் மருத்துவ பரிசோனைக்கு, லண்டனில் இருந்து சென்னைக்கு மருத்துவர்கள் வருகிறார்களா?

By : Mohan Raj
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய லண்டனில் இருந்து மருத்துவர்கள் குழு சென்னை வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை மற்றும் உடல்நிலையை பரிசோதனை செய்ய அடிக்கடி லண்டன் சென்று வருவார். பல முறை லண்டன் சென்று சிகிச்சை பெற்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த ஆண்டு சிகிச்சைக்காக லண்டன் செல்ல அவர் முயற்சிகள் எடுத்தபோது கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்ததால் அந்தப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு தேர்தல் வேலைகள் வந்ததால் அதில் மூழ்கிப்போனார் ஸ்டாலின். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதால் முதல்வரானார், பின்னர் முன்பு இருந்ததைவிட வேலைப்பளு கூடிப்போனதால் அவர் லண்டன் செல்வது கேள்விக்குறியானது.
தற்பொழுது கொரோனோ இரண்டாம் அலை சற்று ஓய்து காணப்படுவதால் லண்டன் செல்ல திட்டமிட்டு வந்ததும் அதிக வேலைப்பளு காரணமாக தடைபட்டுள்ளது.
அத்துடன் அவர் லண்டன் செல்வதற்காக சர்வேதேச பயணம் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் மேற்கொள்வது அவ்வளவாக அறிவுறுத்தப்படவில்லை மருத்துவர்களால். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு லண்டன் மருத்துவர்களை சென்னைக்கு வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
