Kathir News
Begin typing your search above and press return to search.

இலவச பேருந்து இல்லைங்க! போட்டுகொடுத்த பெண்மணி ! - ஸ்டாலினின் கிராமசபை கூட்ட பரிதாபங்கள் !

இலவச பேருந்து இல்லைங்க! போட்டுகொடுத்த பெண்மணி !  - ஸ்டாலினின் கிராமசபை கூட்ட பரிதாபங்கள் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  5 Oct 2021 12:00 AM GMT

தமிழக வரலாற்றில் முதன் முறையாக கிராம சபை கூட்டங்களில் முதல்வராக ஸ்டாலின் பங்கேற்கிறார் என ஊடகங்கள் ஊதி பெரிதாக்கும் வேளையில் நேற்றைய பொழுதில் ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டங்களில் நடந்த அவலங்கள் கேலிக்கூத்து ஆகியுள்ளன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச் சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். தனி விமானத்தில் வந்திறங்கிய அவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் விமான நிலையத்துக்குள் சென்று வரவேற்றனர். ஆனால் முன்னாள் அமைச்சரும். சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி விமான நிலையத்துக் குள் செல்ல முயன்றபோது அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனுமதிக்கவில்லை. இத னால் அவர் வாக்குவாதத் தில் ஈடுபட்டார். அப்போது மதுரை எம்.பி. வெங்கடேசன். தி.மு.க. பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்பட பலர் உள்ளே சென்றனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமைச்சர் தமிழரசி எம்.எல்.ஏ கடுப்பாகி சத்தம்போட ஆரம்பித்தார். பல அமைச்சர்களுக்கு போன் செய்து பார்த்தும் அவர் கடைசி வரை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக தமிழரசி இருந்தபோது இவருக்கு தற்போதைய வணிகத்துறை அமைச்சராக இருக்கும் மூர்த்திக்கும் அதிகார போர் நடைபெற்றதாகவும், அதன் காரணமாக அமைச்சரின் பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றும் விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் பலர் பேசிக் கொண்டனர்.

வரவேற்பு முடிவடைந்ததும் உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தவர்களை அரசுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்றும், தி.மு.க அரசை பாராட்டி பேச வேண்டும் என்றும் பயிற்சி கொடுத்து வரிசையாக அமர வைத் திருந்தனர். அதன்படி மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஒரு பெண் எழுந்து பேசும் போது முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். அவரிடம் பேசிய முதலமைச்சர் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று கூறினார்.

அப்போது மற்றொரு பெண் எழுந்து எங்கள் பகுதியில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்தில் டிக்கெட் எடுக்க சொல்கிறார்கள் என்று கூறினார். இதனைக் கேட்டு ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார்.

இதன் பின்னர் சிலர் பேச முயன்றபோது அவர்களிடம் ஸ்டாலின் பெயர் கொடுத்தவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்தபடி புலம்பி சென்றனர்.

இவ்வாறாக கிராமசபை கூட்டம் பரிதாப கூட்டமாக மாறியது நேற்று.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News