Kathir News
Begin typing your search above and press return to search.

லக்கிம்பூர் கலவரத்தை வைத்து மலிவான அரசியல் செய்ய துடிக்கும் சோனியா வாரிசுகள் !

லக்கிம்பூர் கலவரத்தை வைத்து மலிவான அரசியல் செய்ய துடிக்கும் சோனியா வாரிசுகள் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 Oct 2021 5:30 AM IST

சரிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் செய்ய உத்திரப்பிரதேச விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய ராகும் மற்றும் பிரியங்கா கடுமையாக போராடி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க சென்றபோது அங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கூட்டத்தில் இருந்த இரக்கமற்ற கலவரக்காரர்கள் கண்மூடித்தனமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 4 பேர் பா.ஜ.க'வினர்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க உ.பி அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்ததுடன் சம்பவம் நடந்த இடத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஆனால் நாட்டில் என்ன கலவரம் நடந்தாலும் அதை வைத்து எவ்வாறு மலிவான அரசியல் செய்யலாம் என நினைக்கும் சோனியா'வின் புதல்வர்களோ இந்த கலவரத்தை வைத்து அரசியல் செய்ய துவங்கிவிட்டனர்.

குறிப்பாக ராகுல் இந்த கலவரம் பற்றி, "இந்த ஒடுக்குமுறை தொடர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கிளர்ச்சி வெடிக்கும்" என கலவரத்தை மேலும் ஊதி பெரிதாக்கும் வகையில் கூறியுள்ளார். அது மட்டுமின்றி கலவரத்தை அடக்குதல், கொரோனோ பரவல் போன்ற காரணங்களால் அந்த பகுதி பாதுகாக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு தனது குழுவினருடன் சென்று தனது மலிவான அரசியலை செய்ய முற்பட்ட ராகுல் காந்தி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News