Kathir News
Begin typing your search above and press return to search.

போதைபொருள், ஆயுத கடத்தல் மூலம் இலங்கையில் புலிகளுக்கு பணப்பட்டுவாடா - அதிரடியாக கைது செய்த என்.ஐ.ஏ !

போதைபொருள், ஆயுத கடத்தல் மூலம் இலங்கையில் புலிகளுக்கு பணப்பட்டுவாடா - அதிரடியாக கைது செய்த  என்.ஐ.ஏ !
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 Oct 2021 10:15 AM GMT

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பாக சென்னையில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே -47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 மிமீ வெடிமருந்துகளை கைப்பற்றிய விசாரணை தொடர்பாக 47 வயதான முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை கைது செய்தது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அதன் அறிக்கையில் கூறியதாவது, "இலங்கையைச் சேர்ந்தவரும், புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினருமான சத்குணம் என்ற சபேசன், சென்னை வளசரவாக்கம் பகுதியில், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். புலிகளின் இயக்கத்தை மேலும் உருவாக்கவும் இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்துவது என்றும், இலங்கையில் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு போதைப்பொருள் கடத்தலின் மூலம் வருவாயை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்" எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடலோர காவல்படையின் படகிலிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மூலம் இந்த வழக்கு நிரூபணம் செய்யப்பட்டது, மேலும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில், சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள குன்றத்தூரில் வசிக்கும் கொழும்பைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்ற என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டதாக கைது செய்தனர். அவருடன் படகில் இருந்த ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.


Source - the indian express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News