"உங்கள் போலி அனுதாபம் வேண்டாம்" - பிண அரசியல் செய்யும் காங்கிரஸுக்கு வேண்டுகோள் விடுத்த கலவரத்தில் பலியானவரின் குடும்பம் !

"உங்கள் போலி அனுதாபங்கள் வேண்டாம்" என ராகுல் மற்றும் இதர காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு லக்கிம்பூர் கலவரத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் மன வலியுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
லக்கிம்பூர் விவசாயிகள் என்ற போர்வையில் கலவரத்தில் ஈடுபட்டபோது போராட்டத்தின் நடுவே உயிரை இழந்த போராட்டக்காரர்களில் லவ்ப்ரீத் சிங்கும் ஒருவர். லவ்ப்ரீத் சிங் மைத்துனர் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் சிலர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, "இத்தகைய வலிமிகுந்த நேரத்தில் அரசியல் ஆதாயம் பெற விரும்புவோர் இதுபோன்ற செயலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம், மேலும் மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்" என்றும், "இந்த விவகாரத்தில் 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' எடுத்த நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம் . நிதி உதவி உட்பட அனைத்து வகையான ஆதரவையும் வழங்கிய அரசுக்கும் நிர்வாகத்திற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்றும் வலியுடனும், வேதனையுடனும் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் இந்த விவாகரத்தை அரசியலாக்கியே தீருவேன் என ராகுல் விமான நிலையத்தில் தர்ணா போராட்டம் இருப்பதும், பிரியங்கா வதேரா இதனை அரசியலாக்கி பரபரப்பாக்குவதும் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை சார்ந்த ஒருவர் கூட விரும்பவில்லை என தெரிகிறது. ஆனால் இதுவரை இந்த விவகாரத்தை அரசியலாக்க சோனியாவின் வாரிசுகள் பெரிதும் முயன்று வருகின்றனர்.