"என்னோடு போகட்டும்; என் மகனுக்கு அரசியல் வேண்டாம்" - நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டு தி.மு.க'வில் பதவியை வாங்கிய வைகோ உருக்கம் !

"என் மகனுக்கு அத்தகைய கடினமான நிலை வேண்டாம் என்பது என் கருத்து. என்னோடு போகட்டும் அரசியல் என்று நினைக்கிறேன்" என 90'களில் நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் விட்டு தி.மு.க'வில் எம்.பி பதவியை வாங்கி ஒதுங்கிய வைகோ தெரிவித்துள்ளார்.
90'களில் தி.மு.க'வை விட்டு பிரிந்து தனது ஆதரவாளர்களுடன் "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்" என்ற கட்சியை துவங்கினார் வைகோ. பின்னர் வந்த தேர்தல்களில் கட்சி மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்தார். இவரும் நாடாளுமன்ற எம்.பி'யாக பதவி வகித்துள்ளார். தற்பொழுது கூட தி.மு.க'வுடன் வைத்த கூட்டணியால் ராஜ்யசபா எம்.பி'யாக வலம் வருகிறார். ஆனால் இவர் ம.தி.மு.க கட்சியை துவங்கிய நேரம் இவரை நம்பி பல இளைஞர்கள் இவரின் பின்னால் சென்றார்கள். ஆனால் அப்படி நம்பி பின்னால் வந்தவர்கள் வைத்து அரசியலில் லாபம் பார்த்து விட்டு தற்பொழுது தம் மகன் அரசியலுக்கு வருவதை ஆதரிக்க போவதில்லை என கூறியுள்ளார் வைகோ.
இதுபற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், "நான் என்னுடைய வாழ்க்கையின் 56 வருடங்களைப் பொதுவாழ்வில் செலவழித்துள்ளேன். அதில் 28 வருடங்களில் லட்சக்கணக்கான மைல்கள் காரில் பயணித்துள்ளேன். ஆயிரக்கணக்கான மைல்கள் நடைப்பயணமாகச் சென்றிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டு ஐந்தரை வருடங்கள் சிறையில் கழித்துள்ளேன்.
என் மகனுக்கு அத்தகைய கடினமான நிலை வேண்டாம் என்பது என் கருத்து. என்னோடு போகட்டும் அரசியல் என்று நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.
நம்பி வந்தவர்களை பயன்படுத்தி நட்டாற்றில் விட்டுவிட்டு தற்பொழுது மகன் அரசியலுக்கு வருவதை வைகோ எதிர்க்கிறார்.