Kathir News
Begin typing your search above and press return to search.

உ.பியில் வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கும் பிரியங்கா வதேரா - காங்கிரஸ் ஆடும் நாடகம் !

உ.பியில் வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கும் பிரியங்கா வதேரா - காங்கிரஸ் ஆடும் நாடகம் !

Mohan RajBy : Mohan Raj

  |  25 Oct 2021 9:30 AM GMT

உத்திரபிரதேச தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என வாக்குறுதிகளை கணக்கு வழக்கில்லாமல் அள்ளி தெளித்துள்ளார் பிரியங்கா வதேரா.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது, இதற்காக கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா வதேராவிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர் உத்தரபிரதேசத்தில் வாக்குறுதிகளையும் அள்ளி தெளித்தபடி உள்ளார்.

அதன்படி, மாணவிகளுக்கு செல்போன், பிளஸ் 2 படித்து முடித்த பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர், 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, மின் கட்டணம் குறைப்பு, நெல்-கோதுமை கொள்முதல் விலை உயர்வு என பல வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். மேலும் உத்தரபிரதேசத்தில் எந்த நோயாக இருந்தாலும் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

உத்திர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றபெற ராகுலை நம்பாமல் பிரியங்கா வதேராவை காங்கிரஸ் இறக்கி ஆழம் பார்க்கிறது, பிரியங்காவும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வலம் வருகிறார்.



Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News