Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டார் நலமுடன் உள்ளார் - வதந்திகளை நம்பாதீர் !

சூப்பர் ஸ்டார் நலமுடன் உள்ளார் - வதந்திகளை நம்பாதீர் !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Oct 2021 4:15 AM GMT

சூப்பர் ஸ்டார் ரஜினி நலமுடன் இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நேற்று மாலை திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவித்தா. மேலும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் இதனால் எந்த நிமிடமும் அவர் உடல்நிலை பற்றிய தகவல் வரும் என மனம் உருகி வேண்டி வருகின்றனர். மேலும் அவர் வீடு திரும்பவும் பிரார்த்திக்கின்றனர்.



Source - News 18 Tamil nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News