Begin typing your search above and press return to search.
முல்லை பெரியாறு அணை திறந்தது கூடவா முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது? விளாசும் அண்ணாமலை !
By : Mohan Raj
முல்லை பெரியாறு விவகாரத்தில் உரிமையை நிலை நாட்ட வேண்டியது மாநில அரசின் கடமை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நீர்திறக்கும் உரிமையை மீறும் விதமாக நேற்று முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டனர். இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையில் கடும் புகைச்சலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில், "தமிழகம் சார்பில் எந்த அதிகாரிகளுமின்றி முல்லை பெரியாறு அணையை திறந்தது முதல்வருக்கு தெரியாதா? இல்லை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது உரிமையை நிலை நாட்ட வேண்டியது மாநில அரசின் கடமை தான் என்றும்" அவர் தெரிவித்துள்ளார்.
Next Story