Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனார் பெயர் சூட்டப்பட வேண்டும் - அண்ணாமலை !

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனார் பெயர் சூட்டப்பட வேண்டும் - அண்ணாமலை !

Mohan RajBy : Mohan Raj

  |  31 Oct 2021 8:15 AM GMT

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்ச் சூட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, "மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும் தேவர் திருமகனார் பற்றி பெருமையாக பிரதமர் மோடி அவர்கள் நேற்று தனது ட்விட்டர் பதிவிட்டிருந்தது குறிப்பிட்டதக்கது. இதனால் விரைவில் மத்திய அரசின் நடவடிக்கையால் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.


Source - புதிய தலைமுறை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News