தமிழ்நாட்டில் திரவிடியன் ஸ்டாக் என்ற ஒரு மூடர் கூட்டம் உள்ளது - போட்டு உடைத்த ஹெச்.ராஜா !

தமிழ்நாட்டில் 'திராவிடன் ஸ்டாக் எனும் மூடர் கூடம் உள்ளது' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "தெய்வநாயகம் என்பவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ள திருமாவளவனிடம் நான் ஒன்று கேட்கிறேன், திருமாவளவன் எப்படி உங்களுக்கு கிறிஸ்தவர் ஆனார், இந்துக்கள் சனாதனவாதிகள், திருமாவளவன் அவர்கள் புரிவதற்காக சொல்கிறேன், ஆண்டவனை பகவான் என்பது சனாதன வாதிகளின் பழக்கம், ஆனால் அதே ஆண்டவனையும் தேவன் என்று சொல்வதுதான் விவிலியத்தில் பழக்கம், திருக்குறள் முதல் குறலிலேயே திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவராக இருந்திருந்தால், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி தேவன் முதற்றே உலகு என்றுதான் எழுதி இருக்க வேண்டும், ஆனால் அவர் எப்படி அதை எழுதி இருக்கிறார், ஆதி பகவன் முதற்றே உலகு என்று தான் எழுதி இருக்கிறார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "இஸ்லாமியர்கள் உருவம் இல்லாத கடவுளை வழிபடுகின்றனர், கிருஸ்தவர்கள் இயேசுநாதரை வழிபடுகின்றனர், ஆனால் இறைவனின் திருவடியை வழங்குவது என்பது இன்று சனாதனவாதி களின் பழக்கம், அதற்கேற்ப வள்ளவர், பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்றுதான் கூறியுள்ளார், எனவே வள்ளுவர் கிறிஸ்தவர் என்று கூறுபவர்கள் அனைவரும் கிரிப்டோ கிருத்துவர்கள், இவர்களெல்லாம் அரைகுறையாக படித்துவிட்டு அனைத்தும் தெரிந்ததைப் போல பேசுபவர்கள், இவர்கள் எல்லாம் தற்குறிகள், தமிழ்நாட்டில் திரவிடியன் ஸ்டாக் என்ற ஒரு மூடர் கூட்டம் உள்ளது" என குறிப்பிட்டார்.