Kathir News
Begin typing your search above and press return to search.

வேளாங்கண்ணி கோவில் இந்து அம்மன் ஆலயமே - கிளம்பிய சர்ச்சை கருத்து !

வேளாங்கண்ணி கோவில் இந்து அம்மன் ஆலயமே - கிளம்பிய சர்ச்சை கருத்து !

Mohan RajBy : Mohan Raj

  |  10 Nov 2021 10:45 AM GMT

வேளாங்கண்ணி ஆலயம் இந்து அம்மன் ஆலயம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் திருமாவளவன் பேசிய பேச்சுக்கு பின்னரே இது குறித்து கருத்துக்கள் வெளிவர துவங்கியுள்ளன.

"திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்" என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய நூல் வெளியீட்டு விழா கடந்த 5 தேதி சென்னையில் நடைபெற்றது, அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அப்போது கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை வள்ளுவர் எழுதியுள்ளதாக, நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது" என்றார்.

இதற்கு பின்னர் எழுத்தாளர் ஸ்டேன்லி ராஜன் தனது முகநூல் பக்கத்தில், ''சாந்தோம் ஆலயம் இந்து ஆலயத்தை அழித்து போர்த்துகீசியர்களால் கட்டபட்டிருக்கலாம் என்ற கருத்து ஆய்வுக்கு உட்பட்டது" என எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து எழுதியுள்ளது, "போர்த்துகீசியர்கள் கால் வைத்த இடமெல்லாம் இந்த வம்பினை செய்தார்கள், அக்காலத்தில் போர்த்துகீசிய நாடு போப்பாண்டவரின் நேரடி கட்டுபாட்டில் இருந்தது. அவரை மகிழ்விக்க அதிதீவிர மதப்பரப்பலை அந்நாட்டினர் தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். கள்ளிகோட்டையில் இதை செய்யும்பொழுது எழுந்த கலவரத்தில்தான் வாஸ்கோடகாமா கொல்லபட்டான். கோவா பக்கம் இந்த கோஷ்டியினை தொடக்கத்தில் வீரசிவாஜி அடக்கி வைத்தாலும் பின்னாளில் அந்த சிறிய பகுதியில் தங்கள் கடற்படை பலத்தினால் தனி ராஜ்ஜியம் நடத்திய போர்த்துகீசியர் இந்த தயக்கமின்றி காரியங்களை செய்தனர்.

இந்து ஆலயங்களை அடியோடு மாற்றுவது அவர்களுக்கு பிடித்தமான ஒன்று. தமிழகத்தில் பிரிட்டிசாருக்கு முன்பே வந்து சென்னையின் கடற்கரையினை தொடக்கத்தில் கைபற்றியவர்கள் அவர்களே. அவர்கள் காலத்தில்தான் குபீரென "தாமஸ் மலை" "சாந்தோம்" எனும் சாந்தா தாமஸ் கல்லறை எல்லாம் உருவாயின. அதற்கு முன் அப்படி அடையாளமே இல்லை.

வேளாங்கண்ணி முதல் தென்னக கடற்கரையெங்கும் இந்து ஆலயங்களை அவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றிய பல விஷயம் நடந்தது உண்மை. தென் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் போர்த்துகீசியரின் இந்த வழமை உண்டு. ஆப்கானியர் கூட கோவில் இருந்தால் அதன் அருகில் முதலில் மசூதிகட்டும் வழக்கம் உடையவர்கள். பின் மெல்ல மெல்ல எல்லாம் விழுங்குவார்கள். ஆனால் போர்த்துகீசியர் இந்து ஆலயங்களையே சர்ச்சாக மாற்றி அங்கு இந்துக்கள் இருந்த சுவடையே மறைப்பார்கள்" என எழுதியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல வருடங்களாக சர்ச்சை பேச்சுக்கள் உலாவி வருவதும் உண்மை.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News