திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி இல்லை - தி.மு.க அரசு அறிவிப்பு !

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தி.மு.க அரசு அனுமதித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நடக்கும் நேரந்தில் கொரோனோ கட்டுப்பாடுகளை காரணம் காண்பித்து வருகிற 17-ம் தேதி முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்கையில் கொரோனோவை காரணம் காண்பித்து தி.மு.க அரசு பக்தர்களுக்கு தீபத்திருவிழாவிற்கு அனுமதி அளிக்காமல் இருப்பது மக்களை கொதிப்படைய செய்துள்ளது. தற்பொழுது தமிழகத்தில் தினமும் கொரோனோ தொற்றாளர்கள் எண்ணிக்கை 800 என்ற அளவில் மட்டுமே இருப்பது குறிப்பிடதக்கது. கொரோனோ குறைவாக இருக்கும் போது இது போல் அனுமதி மறுப்பது நியாயமில்லை என பக்தர்கள் கருதுகின்றனர்.