Kathir News
Begin typing your search above and press return to search.

வேளாண் சட்டங்களை திரும்பபெற்றும் போராட்ட களத்தை காலி செய்யாத சில விவசாய சங்கங்கள் !

வேளாண் சட்டங்களை திரும்பபெற்றும் போராட்ட களத்தை காலி செய்யாத சில விவசாய சங்கங்கள் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2021 3:45 PM IST

வேளாண் சட்டங்களை பாராளுன்றம் ரத்து செய்யும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகளில் ஒரு குழுவினர் என கூறிக்கொள்பவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாகவும், வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக போராடி வரும் விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் உற்சாகத்தில் நடனமாடினர். பெரும்பாலான போராட்டக்காரர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர். ஆனால் ஒரு சில விவசாய சங்கங்கள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை பாராளுன்றம் ரத்து செய்யும்வரை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்கள் தவிர மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்

மேலும் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை எனவும், ஒரு வருடமாக தங்களின் இல்லமாக மாறிய போராட்ட களங்கள் காலி செய்யப்படாது என விவசாயிகள் சிலர் கூறுகின்றனர்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News