Kathir News
Begin typing your search above and press return to search.

'ஜெய்பீம்' விவகாரம் - மன்னிப்பு கோரிய இயக்குனர் ஞானவேல்! சூர்யா அமைதி !

ஜெய்பீம் விவகாரம் - மன்னிப்பு கோரிய இயக்குனர் ஞானவேல்! சூர்யா அமைதி !
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2021 6:00 AM IST

'ஜெய்பீம்' பட சர்ச்சை தொடர்பா இயக்குனர் ஞானவேலை வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாக வன்னியர் சங்கங்கள் போர்கொடி தூக்கின. பல இடங்களில் சூர்யா ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டு அவரது படங்கள் கிழிக்கப்பட்டன. பல இடங்களில் சூர்யாவை கைது செய்ய காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ் இதற்கு கண்டனம் எழுப்பி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் எதிர்புகள் அதிகமான நிலையில் வேறு வழியில்லாமல் இயக்குனரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஞானவேல் கூறியதாவது, "ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.

ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News