"ஐயா தி.மு.க எம்.பி தனுஷ் குமார் நிலத்தை அபகரிக்க மிரட்டுறார்" - என கலெக்டர் முன் ஒருவர் தற்கொலை முயற்சி
By : Mohan Raj
தென்காசி தொகுதி தி.மு.க எம்.பி தனுஷ் எம்.குமார் விவசாய நிலத்தை அபகரிக்க மிரட்டல் விடுப்பதாக கனேஷ் குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் முன் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை காவலாளியாக பணிபுரிபவர் தேவதானம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார், இவர் இராஜபாளையம் தி.மு.க எம்.பி தங்கபாண்டியன், மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் பொழுது மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வாகனம் முன்பு உடலில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கணேஷ் குமாரை தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி விசாரித்ததில் கணேஷ் குமார் கூறியதாவது, "கணேஷ்குமார் அதே பகுதியில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தின் ஒட்டிய பகுதியாக தென்காசி தொகுதி தி.மு.க எம்.பி தனுஷ் எம்.குமார் நிலம் உள்ளது.
தி.மு.க எம்.பி தனது நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதனால் விவசாய நிலத்திற்க்கு செல்லும் பாதையில்லை எனவும், ஒரு கட்டத்தில் தனது ரூ.50 லட்சம் மதிப்பிலான 2.5 ஏக்கர் விவசாய நில சொத்தினை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாகவும்" கணேஷ் குமார் கூறினார்.
இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினார், மேலும் இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறி சென்றார்.