தி.மு.க, பா.ம.க எல்லாம் ஜுஜுபி, ஆனா சங்க்பரிவார்கள் லட்சம் மடங்கு வலிமை வாய்ந்தவர்கள் - கதறும் திருமாவளவன் !

By : Mohan Raj
தி.மு.க, பா.ம.க எல்லாம் ஜுஜுபி ஆனா அதைவிட பல லட்சம் மடங்கு பலம் வாய்ந்தவர்கள் சங்பரிவார் அமைப்புகள் என திருமாவளவன் கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.
தனியார் யூ ட்யூப் சேனலில் இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, "நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப தூரம் இருக்கிறது. நான் சந்திக்க வேண்டிய எதிரிகள் இவர்கள் விட பல லட்சம் மடங்கு ரொம்ப வலிமையானவர்கள். சங்பரிவார்களை எதிர்கொள்வது இந்தியாவில் சாதாரண விஷயம் கிடையாது.
பா.ம.க'வை எதிர்கொள்வது தி.மு.க'வை எதிர்கொள்வது ரொம்ப ஜுஜுபி. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சராசரி அரசியல் கட்சிகள். தி.மு.க'வோ, அ.தி.மு.க'வோ, இடதுசாரிகளோ சராசரி கட்சிகள். ஏனென்றால் அவர்கள் கொள்கைகளை வைத்து அரசியல் செய்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்பது அவர்களைப் போல சாதாரண அரசியல் கட்சி கிடையாது. அவர்கள் 100 ஆண்டுகால செயல்திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவர்கள்" என கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது.
