Kathir News
Begin typing your search above and press return to search.

வருகிறது மீண்டும் கனமழை - அலட்சிய அரசு காப்பாற்றுமா என்ற அச்சத்தில் மக்கள் !

வருகிறது மீண்டும் கனமழை - அலட்சிய அரசு காப்பாற்றுமா என்ற அச்சத்தில் மக்கள் !

Mohan RajBy : Mohan Raj

  |  24 Nov 2021 11:45 AM GMT

தமிழ்நாட்டில் வடகிழக்குக் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் 28'ம் தேதி வரைக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது இந்நிலையில் கடந்த முறை போல் தமிழக மக்களை தண்ணீரில் தவிக்க விட்டது போல் இந்த முறையும் தி.மு.க அரசு தவிக்க விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த 20 நாட்களாகவே தீவிரமாக பெய்து வருகிறது. அபரிமிதமாக கொட்டித்தீர்த்த கனமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன குறிப்பாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. விவசாய நிலங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை, சென்னை போன்ற மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் மக்கள் மழைநீர் வடியாமல் இன்னமும் அவதிப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் 27'ம் தேதியும் 28'ம் தேதியும் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை திருப்பத்தூரிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது என அரசு தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை மக்களோ கடந்த முறை படகில் பயணம் செய்யும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது போல் இந்த முறையும் படகில் செல்ல வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். மழை மீது மக்களுக்கு பயம் இல்லை அதன் பாதிப்புகளை சரிசெய்ய இயலாத அரசு மீதுதான் பயம் உள்ளது மக்களுக்கு.


Source - One india tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News