உடல் முழுவதும் பெயிண்ட் ஊற்றி படுத்து, உருண்டு உதயநிதி படம் வரைந்து வாழ்த்து தெரிவித்த தீவிர "உதய்ணா பக்தர்" !

By : Mohan Raj
உதயநிதி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக உடல் முழுவதும் பெயிண்டை ஊற்றிக்கொண்டு உருண்டு, பொரண்டு உதயநிதி படத்தை ஓர் ஆசிரியர் வரைந்துள்ளார்.
இன்று தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதியின் பிறந்தநாள் தி.மு.க'வின் உடன்பிறப்புகளால் மழை, கொரோனோ பாதிப்புகள் ஏதுமின்றி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் புதுமை செய்யும் முயற்சியாக பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான முறையில் தங்கள் இளவரசரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே அரசு பள்ளியில் பணியாற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, உடலில் பெயின்டை ஊற்றிக்கொண்டு, படுத்தும், உருண்டும், பொரண்டும் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார்.
இதற்கு முன் இவர் வாயில் பிரஷை கொண்டு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் படங்களை வரைந்தார் என்பது குறிப்பிடதக்கது.
