நாடார் சமுதாயம் பற்றி கிருஸ்துவ மதபோதகர் அவதூறு - சரத்குமார் கண்டனம் !

குன்றத்தூரில் கிருஸ்துவ மத போதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக பேசியதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 21-ந்தேதி அன்று நடைபெற்ற மத போதனை கூட்டத்தின் போது, பியூலா செல்வராணி என்பவர் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியிருப்பது தவறு. எந்தவொரு சமூகத்தையும், சமுதாயத் தையும் இழிவுபடுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது.
பேசுவதற்கு முன்பாகசிந்தித்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், மோதல்களையும், சிக்கல்களையும் தவிர்க்க லாம். பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளை தவிர்த்திட சம்பந்தப்பட்ட அமைப்பினர் அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பியூலா செல்வராணி பேசுகையில் நாடார் வணிகம் செய்யும் கடைகளில் பெண்களுக்கு பொருள்கள் வழங்கும் போது கையை தொட்டு பொருள்கள் வியாபாரம் செய்வார்கள் என கூறினார் என்பது குறிப்பிடதக்கது.
Source - தினத்தந்தி