மழை வெள்ளத்தில் இருந்து மக்களை தி.மு.க சிறப்பாக காப்பாற்றுகிறது - தண்ணீரில் கால் வைக்காது வந்த திருமாவளவன் பாராட்டு !

"மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என தண்ணீரில் கால் கூட வைக்காத திருமாவளவன் தி.மு.க அரசை பாராட்டியுள்ளார்.
அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, "தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகளவில் உள்ளது. பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. தமிழக முதல்வரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தி.மு.க அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என கூறினார். நேற்று தனது வீட்டில் இருந்து வெளியே வரும்போது தேங்கியிருந்த மழை நீரில் கால் கூட வைக்காமல் சேரில் நடந்து வந்து காரில் ஏறிய திருமாவளவன் மீது விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடதக்கது.