விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மரணம், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! - அண்ணாமலை ட்வீட்!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், குற்றம் செய்த காவலர்களுக்கு உரிய தண்டனை பெற்றுதர வேண்டும் என உயிரிழந்தவரின் சகோதரர் புகார் மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது!
— K.Annamalai (@annamalai_k) December 6, 2021
வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி
1/2 pic.twitter.com/3Be4Q8mofw
இந்நிலையில், மாணவன் மணிகண்டன் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பேட்டியில் கூறியுள்ளார். அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். திமுக அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்க உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter