தென்மாவட்டங்களை குறிவைத்து ஆளுநர் சுற்றுப்பயணம் - அண்ணாமலை புகார் எதிரொலியா?

ஆளுநர் ஆர்.என்.ரவி தென்மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு பின் அண்ணாமலை அளித்த புகார் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வி தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட உள்ளார். இவரின் இந்த திடீர் சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்கிறார். 4 நாட்களுக்கு இந்த பயணத்தை ஆளுநர் மேற்கொள்ள இருக்கிறார்.
நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சென்று நேரில் சந்தித்துள்ளார். மாரிதாஸ் கைது, பாஜகவிற்கு நெருக்கமானவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்ததாக கூறப்பட்டது. புகார் ரிப்போர்ட் ஒன்றை ஆளுநரிடம் அண்ணாமலை இந்த சந்திப்பில் அளித்துள்ளார். அண்ணாமலை ஆளுநரை சந்தித்த அடுத்தநாளே தென்தமிழகத்தில் சுற்றுப்பயணம் திட்டமிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.