"ஈசன் என்பதுதான் ஏசு என்று மாறி பின்பு ஜீசஸ் என மறுவி இருக்கிறது" - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் திருமாவளவன் !

By : Mohan Raj
"ஈசன் என்பதுதான் ஏசு என்று மாறி பின்பு ஜீசஸ் என மறுவி இருக்கிறது" என திருமாவளவன் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
தற்பொழுது சமூக வலைதளங்களில் ஒரு காணொளி வலம் வருகிறது. அதில் அடிக்கடி இந்து மதத்தை குறி வைத்து இழிவாக பேசும் திருமாவளவன் மீண்டும் அதுபோல் இந்து மதத்தை சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். அந்த வீடியோ'வில் அவர் பேசியதாவது, "ஈசன் என்பதுதான் ஏசு என்று மாறி பின்பு ஜீசஸ் என மறுவி இருக்கிறது. கிறித்தவம் என்பது தமிழர்களின் இந்து மதம் தான். (இந்து சகோதரர்களையும் நம் வழியில் கொண்டு வரவேண்டும் என்றால் முதலில் சைவம், வைணவ இலக்கியங்களை அவர்களிடம் நாம் சொல்ல வேண்டும்.
தோமையர் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்கள் தான் சைவ அடையாளங்களாக தொடக்க காலத்தில் இருந்திருக்கின்றன. அந்த சமயத்தினரிடம் ஞான ஸ்தானம் பெற்றவர்தான் திருவள்ளுவர். தோமையர் வழி வந்த தமிழர் சமயத்தவர்களால் செய்யப்பட்டது. தோமையர் கூறியதை கேட்டு அவர் அறிந்தவற்றை தெரிந்தவற்றை கேட்டு திருக்குறளாக எழுதினார் திருவள்ளுவர். திருக்குறளில் ஒவ்வொரு குறளிலும் கிறிஸ்தவ சிந்தனை இருக்கும்" என சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியுள்ளார் திருமாவளவன்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
