'ருத்ரதாண்டவம்' பாணி - மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது, வருகிறது புதிய சட்டம் !

தாய்மதம் மாறினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு பறிபோகும் என்பது போன்ற மதமாற்ற தடைச்சட்டம் சட்டம் விரைவில் கர்நாடகாவில் அமலுக்கு வரவிருக்கிறது மதமாற்ற தடைச்சட்டம்.
அப்படி மதமாற்ற தடைச்சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, இதனை கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. இந்த சட்டம் கர்நாடக சட்டப்பேரவையில் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் இஸ்லாம் அல்லது கிறித்தவ மதத்திற்கு மாறும் பின்தங்கிய வகுப்பினருக்கு இந்த சலுகைகள் இனி கிடைக்காது.
மாறாக மதம் மாறிய அவர்கள் சிறுபான்மையினராகவே கருதப்பட்டு சிறுபான்மையினருக்கு என்ன ஒதுக்கீடு உள்ளதோ அதுவே அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படும். இப்படியாக தரவுகள் கொண்ட சட்டத்தை மிக விரைவில் கர்நாடக அரசு அமல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.