இந்து கோயில்களை மட்டும் இடிக்கின்ற அரசாக தி.மு.க. இருக்கிறது: ஹெச்.ராஜா கடும் கண்டனம்!
இந்து கோயில்களை மட்டும் இடிக்கின்ற அரசாக திமுக உள்ளது என்று பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
By : Thangavelu
இந்து கோயில்களை மட்டும் இடிக்கின்ற அரசாக திமுக உள்ளது என்று பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்டத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம் நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஹெச்.ராஜா பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இனிமேல் ஆவது திமுக அரசு ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்வதற்கு முப்படைத் தலைமை தளபதியின் மரணத்தை கொண்டாடியதை வைத்து தெரிந்துக் கொள்ளலாம். தற்போது தமிழகத்தில் தேச விரோத சக்திகள், சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.
அதாவது கருணாநிதியை விட முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் பயங்கரமானவர் என்றார். மேலும், கருணாநிதி அவரது முடிவை அவரே எடுப்பார். ஆனால் தற்போதைய நிலையில் போராட்டக்காரர்களால் இந்த ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் கோயில்களை இடிக்கின்ற ஆட்சியாக திமுக உள்ளது. அதையும் தாண்டி பட்டா நிலத்தில் உள்ள கோயிலையும் இடிக்கின்றனர். ஆனால், கோயில் நிலத்தில் இருக்கும் கிறிஸ்தவ வணிக வளாகத்தை இடிக்காமல் உள்ளனர். திமுக என்பது இந்துக்குளுக்கு எதிரான அரசு ஆகும். மாநிலத்தில் இந்துக்களுக்கு எதிரான பயங்கரவாதம் உள்ளது.
மேலும், திருவண்ணாமலை தீபத்திற்கு, திருச்செந்தூர், சிதம்பரம் நடராஜர் கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கேட்டால் கொரோனா பரவிவிடும் என்ற காரணத்தை சொல்கின்றனர். ஆனால் சேலத்தில் மட்டும் ஸ்டாலின் பொதுக்கூட்டம் நடத்துகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சர்ச்சுகளில் யாரும் வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்ல இந்த அரசுக்கு தைரியம் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
Source: Hindu Tamil
Image Courtesy:Times Of Tamilnadu