வங்கதேசத்தில் இருந்து இந்து மத பெயரில் போலியாக ஆட்களை இந்தியாவிற்குள் அனுப்பிய 'கயூம்' - தூக்கிய உ.பி அதிகாரிகள்

வங்கதேசத்தில் இந்து மத பெயர்களை வைத்து போலி பாஸ்போர்ட் தயாரித்து அனுப்பிய கயூம் என்ற நபரை உத்திரபிரதேச அரசின் தீவிரவாத தடுப்பு படை கைது செய்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை அன்று உத்திரபிரதேச தீவிரவத தடுப்பு பிரிவு போலீசார் ஒன்பது பேரை கொண்ட ஒரு கும்பலை கொல்கத்தாவில் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது அந்த கும்பலின் முக்கிய பணி வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுகளை போலி இந்து அடையாளங்களை பயன்படுத்தி தயாரித்து, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது வழக்கம் எனவும் அவர்கள் அந்த சமூக விரோத செயலை வைத்து இந்துக்கள் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வங்கதேச மற்றும் ரோஹிங்கியாக்களை இந்தியாவிற்கு சட்டவிரோதமாக அனுப்பியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.டி.எஸ் கஜேந்திர குமார் கோஸ்வாமி அவர்கள் கூறுகையில், "புது டெல்லியில் உள்ள கத்வாரியா சாராயில் 'கோகான் சர்தார்' என்ற போலி அடையாளத்தில் வசித்து வந்த கயூமை லக்னோவில் உள்ள ஏ.டி.எஸ் தலைமையகத்தில் விசாரித்தோம், பின்னர் அவரை கைது செய்தோம் பின்னர் விசாரணையில் கயூம் சிண்டிகேட்டின் முக்கிய உறுப்பினர் என்றும், வங்காளதேசம், ரோஹிங்கியாக்கள் விமான நிலையங்களில் இருந்து அவர்களின் பயணத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்யும் பணியை செய்து வந்தார் எனவும்" தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், "கயூம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாக பேசக்கூடிய அளவிற்கு புலமை பெற்றவர் என்றும், அந்த பணிக்காக அவருக்கு ரூ.1 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டதாகவும்" ஏ.டி.எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கயூம் இதுபோல் சட்டவிரோதமாக அனுப்பும் நபர்களுக்கு ஏதேனும் பிரச்சினையில் சிக்கினால் அதில் தலையிட்டு அவர்களை இந்தியாவிற்குள் லாவகமாக அனுப்பும் அளவிற்கு திறன் படைத்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.