தி.மு.க அரசின் கோவில் தங்க நகைகளை உருக்கும் திட்டம் - நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

By : Mohan Raj
தி.மு.க அரசின் கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கும் திட்டத்தை 6 வாரங்களுக்கு தள்ளி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க அரசின் அறநிலையத்துறை கொண்டு வந்த கோவில்களில் காணிக்கையாக வந்துள்ள தங்கநகைகளை உருக்கி அதனை கட்டிகளாக மாற்றும் திட்டத்துக்கு இந்து சமுதாய மக்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, இதனையடுத்து அறநிலையத்துறையின் இந்த திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதுதொடர்பாக தி.மு.க அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
இந்தநிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டனர். இதனால் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை 6 வாரங்களுக்கு தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது தி.மு.க அரசு.
