ராணுவ தளபதி மரணத்துடன் மோடியை இணைத்து பதிவிட்ட நபரை கோவையில் கைது செய்த காவல்துறை !

ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தில் பிரதமர் மோடியை சம்மந்தப்படுத்தி முகநூலில் கார்ட்டூன் வெளியிட்ட கோவையை சேர்ந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 8'ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் கோவையை சேர்ந்த 'நான் தான் பாலா' என்ற பேஸ்புக் பக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேஸ்புக் தளத்தில் முப்படை தலைமை தளபதி இறந்தது குறித்து, அநாகரீகமான முறையில் பிரதமர் மோடியை அதனுடன் தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உடனே சம்பந்தப்பட்ட நபரின் மேல் சரவணம்பட்டி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய முகநூல் கணக்கிற்கு சொந்தக்காரரான கோவை பாலன் என்பவரை 3 பிரிவின் கீழ் முக்கியமாக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வழக்கில் கைது செய்துள்ளனர்.