கோவா'வில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் விலகினார் - அதளபாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்

அடுத்த ஆண்டு கோவா'வில் தேர்தலை சந்திக்கவுள்ள காங்கிரஸ் கட்சியில் இருந்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர் விலகியுள்ளார்.
40 தொகுதிகள் கொண்ட கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பா.ஜ.க ஆட்சியை தக்க வைக்க மிகவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி காட்டி களமாடி வருகிறது. ஆனால் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட முதல் 8 வேட்பாளர்களில் ஒருவரான அலெக்சிகோ ரெஜினால்டோ லூரென்கோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும் இவர் தற்போதைய தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
அலெக்சிகோ ரெஜினால்டோ லூரென்கோ காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ஆகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் ஏற்கனவே அதளபாதாளத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.