எம்.பி ஹேமமாலினியை அவதூறாக பேசிய சிவசேனா கட்சி மந்திரி - வலுக்கும் எதிர்ப்புகள்

By : Mohan Raj
பா.ஜ.க எம்.பி ஹேமமாலினி'யை அவதூறாப பேசிய மகாராஷ்டிரா குடிநீர் வினியோக துறை மந்திரி குலாப்ராவ் பாட்டீலுக்கு கண்டனங்கள் குவிகின்றன.
மகாராஷ்டிரா மாநில குடிநீர் வினியோக துறை மந்திரி குலாப்ராவ் பாட்டீல், தனது தொகுதியில் உள்ள சாலைகளை பாஜக எம்.பி. யுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஆனது. ஒரு பெண் என்றும், எம்.பி என்றும் பாரமல் இப்படி பொது வெளியில் அநாகரிகமாக பேசிய குலாப்ராவ் பாட்டீல் செயலுக்கு அனைத்து தரப்பினரும் கட்சி பாகுபாடின்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கோரும் வகையில் பேசிய சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறுகையில், "சாலைகளை பா.ஜ.க எம்.பி ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியதற்கு குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்டு விட்டார். அவர் தவறான முறையில் அவ்வாறு கூறவில்லை" என பேசியுள்ளார்
இதற்கு பதிலளித்துள்ள எம்.பி ஹேமமாலினி கூறுகையில், "இதுபோன்று ஒப்பிடுவதை லாலு பிரசாத் தான் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அவரை பின்பற்றி பலரும் இது போன்று பேசி வருகின்றனர். இந்த வகை வாக்கியங்கள் சரியானவை அல்ல" என வருத்தத்துடன் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
