Kathir News
Begin typing your search above and press return to search.

"கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களின் புத்தாண்டில் அரசு தலையிடுகிறதா? அதே போன்று இந்துக்கள் புத்தாண்டிலும் அரசு தலையிட அதிகாரம் இல்லை" - ஹெச்.ராஜா!

தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் புத்தாண்டில் அரசு தலையிடுவதில்லையோ அது போன்று இந்துக்களின் புத்தாண்டிலும் அரசு தலையிட எவ்வித அதிகாரமும் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களின் புத்தாண்டில் அரசு தலையிடுகிறதா? அதே போன்று இந்துக்கள் புத்தாண்டிலும் அரசு தலையிட அதிகாரம் இல்லை - ஹெச்.ராஜா!

ThangaveluBy : Thangavelu

  |  23 Dec 2021 3:41 AM GMT

தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் புத்தாண்டில் அரசு தலையிடுவதில்லையோ அது போன்று இந்துக்களின் புத்தாண்டிலும் அரசு தலையிட எவ்வித அதிகாரமும் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கும்பகோணம், குடந்தையில் டி.ஆர்.எம். அறக்கட்டளை சார்பாக திருத்தல்ஙகளை தேடி என்ற நூல் வெளியிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பேசும்போது, தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில அரசின் பாடலாக அறிவித்ததை வரவேற்கிறோம். அது மட்டும் போதாது, தமிழ்தாய் வாழ்த்து பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எப்படி எழுதினாரோ அப்படியே இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான பாடல் இடம் பெறும்.

மேலும், தமிழ்ப்புத்தாண்டை சித்திரை 1ம் தேதிதான் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை எங்கள் ஆச்சாரியராக விளங்கும் ஞானப்பிரகாசரும் அதனைதான் கடைப்பிடித்து வந்தார். எனவே ஆதின பரமாச்சாரியர்களின் வழியிலேயே சித்திரை 1ம் தேதித்தான் நாங்கள் தமிழ் புத்தாண்டாக கடைப்பிடிப்போம் என்றார். தற்போதைய பதவியேற்றுள்ள திமுக அரசு தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு என்று கூறி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்திலுள்ள கிறித்தவர்கள், முஸ்லிம்களின் புத்தாண்டில் எப்படி அரசு தலையிடுவதில்லையோ அதுபோல் இந்துக்களின் புத்தாண்டிலும் அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை. மதத் தலைவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy:Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News