Kathir News
Begin typing your search above and press return to search.

கட்சியை வலுப்படுத்த நன்கொடை அளியுங்கள்: பா.ஜ.க. அறிவிப்பு!

கட்சியின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில் தங்களால் முடிந்த சிறிய அளவிலான நன்கொடையை வழங்கி பாஜகவுக்கு ஆதரவு தரும்படி அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கட்சியை வலுப்படுத்த நன்கொடை அளியுங்கள்: பா.ஜ.க. அறிவிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  26 Dec 2021 5:17 AM GMT

கட்சியின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில் தங்களால் முடிந்த சிறிய அளவிலான நன்கொடையை வழங்கி பாஜகவுக்கு ஆதரவு தரும்படி அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் நலன் மற்றும் தன்னலமற்ற சேவையை அடிப்படையான கொள்கையாக பாஜக செயல்பட்டு வருகிறது. எனவே கட்சியை வலுப்படுத்துவதன் மூலமாக நமது நாட்டை மேலும் பலப்படுத்த முடியும்.

நாட்டில் உள்ள நமது மக்களுடன் கட்சி நிர்வாகிகள் தொடர்பில் இருக்கின்ற வகையில் தங்களால் முடிந்த சிறிய அளவிலான நன்கொடை வழங்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக 'நமோ' என்ற மொபைல் போன் செயலி வாயிலாக நன்கொடையை ரூ.5 முதல் 1000 வரை அளிக்கலாம். உலகின் மிகப்பெரிய தேசியவாத இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக அனைவரின் ஆசியையும் கேட்கிறோம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News