மேடை ஏறி அடித்து நாம் தமிழர் கட்சியை வளர்த்துவிட்ட தி.மு.க !

மேடையில் நாம் தமிழர் கட்சியினரை தி.மு.க'வினர் தாக்கிய பின் நாம் தமிழர் கட்சியின் அரசியல் வாழ்வில் மெல்ல மற்ற கட்சிகளின் ஆதரவு திரும்ப துவங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஹிம்லர் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது தி.மு.க'வை சார்ந்தவர்கள் மேடையில் ஏறி ரவுடியிசம் செய்ய துவங்கினர். பின்னர் ரவுடியிசத்தின் உச்சமாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஹிம்லரை தி.மு.க'வினர் தாக்க துவங்கினர். அரசியல் அரங்கில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இதற்கு அ.தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் நாம் தமிழருக்கு ஆதரவாக தி.மு.க'வை எதிர்த்து பேசத்துவங்கியுள்ளன.
இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி கூறுகையில், "தி.மு.க நிர்வாகிகள் மீது நடவடிக்கை தேவை. ஆளுங்கட்சியினரைத் தடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்தது ஜனநாயகப் படுகொலை" என குறிப்பிட்டுள்ளார்.
டி.டி.வி தினகரன் குறிப்பிடுகையில், "தி.மு.க-வின் சுயரூபம் தற்போது வெளிவருகிறது. மக்கள் இதற்கு சரியானப் பாடம் புகட்டுவார்கள்" என்றார். பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிடுகையில், "சகிப்புத்தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும்தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்க வேண்டும்" என காட்டமாகவே தெரிவித்துள்ளார்.
வி.சி.க சார்பில் திருமாவளவன் இந்த சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், "கருத்துக்கு கருத்துதான் எடுக்கவைக்கப்பட வேண்டுமே தவிர, வன்முறையில் ஈடுபடகூடாது. வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க'வினரை கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். இப்படியாக மேடையில் தி.மு.க அடித்ததன் மூலம் நாம் தமிழர் கட்சி தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.