"தளபதிக்கெல்லாம் தளபதி செந்தில்பாலாஜி" - 'ஐஸ்தமிழனாக' மாறிய 'புரட்சிதமிழன் சத்தியராஜ்' !

"தளபதிக்கெல்லாம் தளபதியாக இருக்கிறார் செந்தில்பாலாஜி" என கோவையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அதீதமாக புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் சத்தியராஜ்.
'ஆற்றல்' என்ற தனியார் அமைப்பின் சார்பில் கோவையில் ஒரு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சத்தியராஜ் மற்றும் தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
இந்த விழாவில் தொழில் அடிப்படையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த விருதுகள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். அப்போது பேசிய நடிகர் சத்தியராஜ் கூறியதாவது, "தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதைப்போல, செந்தில் பாலாஜி போல ஒரு தம்பி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் ஏன் படைக்கு அஞ்சப்போகிறார்? தளபதிக்கெல்லாம் தளபதியாக இருக்கிறார் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜி தொட்டதெல்லாம் வெற்றிதான். செந்தில்பாலாஜியின் சுறுசுறுப்பை சாதாரண நிலையில் இருப்பவரும் பாராட்டுகிறார், முதலமைச்சரும் பாராட்டுகிறார்" என பாராட்டு மழை பொழிந்துவிட்டார்.
இறுதியில் அந்த விருது வழங்கும் விழா செந்தில்பாலாஜிக்கு பாராட்டு விழா போன்று நடந்தேறியது.