'மோடி'க்கு கருப்பு கொடியா! அய்யகோ' - சாஷ்டாங்கமாக விழுந்த தி.மு.க !

"மோடி எங்க எதிரியா? அவரு எங்க விருந்தாளி? நாங்க எப்படி கருப்பு கொடி காட்ட முடியும்?" என அந்தர்பல்டி அடிக்கும் விதமாக தி.மு.க தனது அக்மார்க் அரசியல் நிலையை தி.மு.க'வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் விளக்கியுள்ளது.
வரும் ஜனவரி 12'ம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை புரிகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை தமிழக மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார். அதே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமர உள்ளார்.
இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிரதமர் மோடி வரும்போதெல்லாம் தி.மு.க'வினர் "கோ பேக் மோடி" கோஷமிட்டதையும், கூலிக்கு ஆட்களை வைத்து இணையத்தில் ட்ரெண்டிங் செய்ததையும் எதிர்கட்சிகள் நினைவு கூர்ந்தனர். உடனே சுதாரித்துகொண்ட தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் ஒரு தன்னிலை விளக்கத்தை கொடுத்துள்ளது.
அதில் ஒரு பேட்டியில் கூறியபடி ஆர்.எஸ்.பாரதி ஒரு விளக்கத்தை கூறியுள்ளார். அதில், "பிரதமர் மோடி எங்களுக்கு என்றுமே எதிரி கிடையாது, மாறாக அவர் எங்கள் விருந்தாளி. அவர் வரும்போது "கோ பேக்" கூறுவது எந்தவகையில் நியாயம்? எங்கள் விருந்தாளியாக வருகிறார். மேலும் அவர் மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகிறார். நாங்கள் எவ்வாறு எதிர்த்து கருப்பு கொடி காட்ட முடியும்?" என தி.மு.க'வின் அக்மார்க் அந்தர்பல்டி குணத்தை வெளிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன் வரலாற்றில் தி.மு.க எதிர்த்த தேசிய தலைவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம் அரசியல் லாபத்திற்காக தி.மு.க சாஷ்டாங்கமாக விழுந்து வரவேற்றது குறிப்பிடதக்கது.