சோலார் பேனல் அமைக்கும் நிறுவனத்திடம் தி.மு.க எம்.எல்.ஏ பணம் கேட்டு மிரட்டலா? பகீர் தகவல்கள்!

விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ சோலார் பேனல் அமைக்கும் தனியார் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம், ஆத்திக்கிணறு முள்ளுப்பட்டி உள்ளிட்ட 10 ஊர்களில் ஜி.ஆர்.டி எனும் தனியார் நிறுவனம் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தின் பணிகள் விவசாயத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் எழுப்பினர்.
இந்நிலையில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன் தலைமையில் சிலர் பொம்மையாபுரம் - போடிப்பட்டி இடையில் நடந்து வரும் சோலார் பேனல் இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற எம்.எல்.ஏ மார்கண்டேயன் அங்கு வேலை செய்யும் பொறியாளர்களை வாய்க்கு வந்தபடி சகட்டுமேனிக்கு திட்டியுள்ளார். அங்கு உள்ளவர்களை மிரட்டியும் வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
இது தொடர்பாக கட்சினர் வட்டத்தில் கூறியதாவது, "ஆளும்கட்சி எம்.எல்.ஏ'வா இருந்துகிட்டு இப்படி அடாவடித்தனம் பண்றார், அ.தி.மு.க எம்.எல்.ஏ'வா இருக்கும் போது வைப்பாறு மணல் கொள்ளையில் மாட்டியதால் அடுத்த முறை மறைந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் சீட்டு கொடுக்கவில்லை, பின் தி.மு.க'வில் யாரையோ பிடித்து சீட் வாங்கி தற்பொழுது எம்.எல்.ஏ'வாகி இப்படி அடாவடித்தனம் செய்கிறார் என்கின்றனர்.
ஆனால் இந்த புகார் குறித்து எம்.எல்.ஏ மார்கண்டேயன் தரப்பு மறுத்துள்ளது.