கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதி - நம்பிய மக்கள், நம்பவைத்து கழுத்தறுத்த தி.மு.க !

தி.மு.க'வின் தேர்தல் அறிக்கையில் கூறியதில் முக்கிய வாக்குறுதி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தற்பொழுது விதிமுறைகளை பின்பற்றி 35 லட்சம் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியில்லை என தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சில சதவிகித ஓட்டுக்கள் வித்தாயசத்தில் வெற்றி பெற காரணம் அக்கட்சியின் வாக்குறுதிகள். குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை, நகைக்கடன் தள்ளுபடி போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி மக்கள் மத்தியில் தெளித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது தஞ்சையில் உதயநிதி, "இப்பவே போய் 5 சவரன் நகையை அடகு வச்சுடுங்க, அடுத்த வரப்போறது நம்ம கழக ஆட்சி, எல்லாத்தையும் தள்ளுபடி பண்ணிருவாங்க" என மக்களிடத்தில் ஆசையை தூண்டும் விதமாக பேசி வாக்குகளை சேகரித்தார்.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க ஒவ்வொரு வாக்குறுதிக்கும் ஒரு காரணத்தை கூறி தட்டி பதித்து வந்தது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன்களில் 35,37,693 நகைக்கடன் தள்ளுபடி கிடையாது" என அறிவித்துள்ளது.
அதற்கு காரணமாக ஏற்கனவே 2021'ம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள், அவர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் என சில நிபந்தனைகளை விதித்து மொத்தம் கடன் பெற்ற 48,84,726 நபர்களில் 35,37,693 என முக்கால்வாசிக்கும் மேற்பட்ட நபர்களை நிபந்தனையின் காரணமாக நகைக்கடன் தள்ளுபடியில் இருந்து தி.மு.க அரசு நீக்கியுள்ளது.
இது கண்துடைப்பாகும் வாக்குறுதிகள் தந்து ஒட்டு வாங்கும் போது இதுபோன்ற நிபந்தனைகள் கூறவில்லை, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டு தற்பொழுது வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் யார் கேட்கப்போகிறார்கள் என தன் விருப்பத்திற்கு தி.மு.க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஏமாந்தது தி.மு.க'வை நம்பி வாக்களித்த மக்கள்'தான்.