Kathir News
Begin typing your search above and press return to search.

"யாராவது பிரதமர் வர்றப்ப எதிர்த்தீங்க தொலைச்சுடுவோம்" - தி.மு.க'வினருக்கு பறந்த வாய்மொழி உத்தரவு !

யாராவது பிரதமர் வர்றப்ப எதிர்த்தீங்க தொலைச்சுடுவோம் - தி.மு.கவினருக்கு பறந்த வாய்மொழி உத்தரவு !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Dec 2021 11:00 AM GMT

வரும் ஜனவரி 12'ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன், ஹேஷ் டேக் போன்றவற்றை தி.மு.க'வினர் செயல்படுத்த கூடாது என தி.மு.க தலைமையிடம் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 12'ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி மூலம் உருவாக்கிய 11 மருத்துவ கல்லூரிகளை திறக்க வருகிறார். அந்த விழா மேடையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அன்று நடக்கும் விழாவில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 11 மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்காக திறக்கவுள்ளார் பிரதமர் மோடி.

இந்நிலையில் இதுவரை கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகம் வந்தாலே கருப்பு பலூன் பறக்க விடுவதில் இருந்து, கருப்பு சட்டை அணிந்துகொள்வதில் இருந்து, "கோ பேக் மோடி" என ஹேஷ் சமூக வலைதளங்களில் பகிர்வதை தலையாய கடமையாக அரசியல் காரணங்களுக்காக தி.மு.க செய்துவந்தது. இதனால் மோடி எதிர்ப்பு மனநிலை மக்களிடத்தில் நிலவுவது போல் வெளிவேஷமிட்டு தேர்தலை சந்தித்து வந்தது தி.மு.க. ஆனால் ஒருமுறை கூட பிரதமர் மோடி தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அவர் தீங்கு நினைத்ததில்லை மாறாக தமிழக மக்களையும், தமிழையும் கொண்டாடி இருக்கிறார்.

ஆனால் தற்பொழுது ஆளும் கட்சியாக இருப்பதால் தமிழகத்திற்கு வரும் மோடிக்கு வரவேற்க தி.மு.க தயாராகி வருகிறது. இதற்கிடையில் தி.மு.க'வினர் யாரும் ஆர்வக்கோளாறில் பழைய ஞாபகத்தில் "கோ பேக்" எனவும், கருப்பு சட்டையணிந்து எதிர்ப்பை காட்டி விடுவார்களோ என தி.மு.க பயந்து வருகிறது. இதனால் வாய்மொழி உத்தரவாக யாரும் பிரதமர் மோடி வரும் அன்று கருப்பு சட்டை அணிவது, "கோ பேக் மோடி" என கோஷமிடுவது போன்ற எதிர்ப்பு செயல்களில் ஈடுபடக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம் தி.மு.க தலைமையிடம் இருந்து.


Source - One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News