Kathir News
Begin typing your search above and press return to search.

"இப்பவாது தி.மு.க'விற்கு நல்ல புத்தி வந்துச்சே" - "கோ பேக் மோடி" விவகாரத்தில் தி.மு.க'வின் பல்டி பற்றி நாராயணன் திருப்பதி !

இப்பவாது தி.மு.கவிற்கு நல்ல புத்தி வந்துச்சே - கோ பேக் மோடி விவகாரத்தில் தி.மு.கவின் பல்டி பற்றி நாராயணன் திருப்பதி !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Dec 2021 11:15 AM GMT

"அதிகாரத்தில் இருப்பவர்களுடன் கை கோர்த்து கொள்வதும், அதிகாரத்தில் இல்லாதவர்களை வசைபாடுவதும் தி.மு.க'விற்கு கை வந்த கலை" என மோடி தமிழக வருகை விவகாரத்தில் தி.மு.க சரண்டர் ஆனதை பற்றி பா.ஜ.க'வின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

எதிர்கட்சியாக இருக்கும் போது கூலி'க்கு எல்லாம் ஆட்களை நியமித்து "கோ பேக் மோடி" என இணையத்தில் முழங்கி வந்த தி.மு.க தற்பொழுது அந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கி காலில் விழுந்தது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் அரசியல் உலகில் வலம் வருகின்றன. இது குறித்து தி.மு.க'வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "மோடி என்றைக்குமே எங்களுக்கு எதிரியல்ல, அவர் நம் விருந்தினர்" என சாஷ்டாங்கமாக கூறியுள்ளார். இதற்கு முன்னரும் மோடி தமிழ்நாட்டிற்கு எதிரி கிடையாது, அவர் அவ்வாறு நினைக்க போறதும் இல்லை. ஆனால் அரசியல் லாபத்திற்காக யாருக்கு வேண்டுமானாலும் தி.மு.க குடை பிடிக்கும் என இதன் மூலம் தி.மு.க வரலாறு தெரியாத பலர் தெரிந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "அன்று எதிர்கட்சியாக இருக்கும் போது "கோ பேக்" என கூறியவர்கள் இன்று "ப்ளீஸ் கம்" என கூறுகின்றனர். இது தி.மு.க'வின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. பிரதமர் மோடி என்றைக்குமே தமிழக மக்களுக்கு எதிரியாக இருந்ததில்லை, ஆனால் மொழி அரசியலையும், மாநில அரசியலையும் தி.மு.க எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம்" என கூறினார்.


மேலும் பேசிய அவர், "அதிகாரத்தில் இருப்பவர்களுடன் கை கோர்த்து கொள்வதும், அதிகாரத்தில் இல்லாதவர்களை வசைபாடுவதும் தி.மு.க'விற்கு கை வந்த கலை, ஆனாலும் இப்பவாது இவர்களுக்கு நல்ல சிந்தனை வந்திருப்பது வரவேற்கதக்கது" என்றார் நாராயணன் திருப்பதி.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News