Kathir News
Begin typing your search above and press return to search.

வீடு, வீடாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுபவர் எப்படி பொதுவான முதலமைச்சராக இருக்க முடியும்: ஸ்டாலின் செயலுக்கு விஜயகாந்த் கண்டனம்!

முதலமைச்சராக இருந்துக்கொண்டு ஸ்டாலின் வீடு, வீடாக சென்று திமுக கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வீடு, வீடாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுபவர் எப்படி பொதுவான முதலமைச்சராக இருக்க முடியும்: ஸ்டாலின் செயலுக்கு விஜயகாந்த் கண்டனம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Dec 2021 2:21 PM GMT

முதலமைச்சராக இருந்துக்கொண்டு ஸ்டாலின் வீடு, வீடாக சென்று திமுக கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: முதலமைச்சர் என்பவர் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத ஒட்டு மொத்த மக்களுக்கும் பொதுவானவர். தமிழகத்தின் முதன்மை பதவியில் இருக்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தி.ரு.வி.க. நகரில் வீடு வீடாக சென்று அவர் சார்ந்த திமுக உறுப்பினர் படிவத்தை, நேரடியாக சென்று வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் பொதுகூட்டங்களில் பங்கேற்பது, வாக்கு சேகரிப்பது என்பது அனைவரும் செய்யகூடிய ஒன்று. ஆனால் தான் சார்ந்த் கட்சிக்கு ஒருதலைப்பட்சமாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது மிகவும் தவறான முன் உதாரணமாகும். கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள், சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தால் அது தவறில்லை. அதுமட்டுமின்றி திரு.வி.க. நகரிலேயே மேசை, நாற்காலி அமைத்து, அதில் முதல்வர் அமர்ந்து கொண்டு அப்பகுதி பெண்களை வரவழைத்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து பெறுவது மிகவும் தவறான முன் உதாரணம்.

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட தங்களை நேரடியாக சந்திக்காத முதலமைச்சர், தனது அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வராக பதவியேற்கும் போது ஒட்டுமொத்த மக்களுக்கும் நான் நடுநிலையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்ற மு.க. ஸ்டாலின், தற்போது முதல்வர் பதவியை வைத்து கொண்டு, ஒரு தலைபட்சமாக செயல்பட்டது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Facebook

Image Courtesy:Hindu Tamil



Next Story
கதிர் தொகுப்பு
Trending News