Kathir News
Begin typing your search above and press return to search.

நாடே ஒமைக்கிரான் பரவலை தடுக்க போராடும் போது தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் பரபரப்பாக முதல்வர் ஸ்டாலின் !

நாடே ஒமைக்கிரான் பரவலை தடுக்க போராடும் போது தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் பரபரப்பாக முதல்வர் ஸ்டாலின் !

Mohan RajBy : Mohan Raj

  |  30 Dec 2021 10:15 AM GMT

கொரோனோ மூன்றாம் அலை ஒமைக்கிரான் என உருமாறி பரவி வரும் நிலையிம் டெல்லி, கேரளம் போன்ற மாநிலங்கள் ஊடரங்கை தீவிரப்படுத்தும் நிலையில் இருக்க தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு மூன்றாம் அலையை பற்றி கவலை கொள்ளாமல் தி.மு.க உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறது.


கொரோனோ உருமாறிய வைரஸ் ஒமைக்கிரான் என்ற பெயரில் கடந்த பத்து நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் போராடி வருகின்றன. பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளவிருந்த துபாய் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த வாரம் ஒமைக்கிரான் பரவல் சமூக நிலையை எட்டியுள்ளது என தெரிவித்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் பரபரப்பாக செயல்பட்டு ஊரடங்கு, தடுப்பூசி வேகம் என வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி மக்களை காக்க வேண்டிய தி.மு.க அரசோ தி.மு.க கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக செயல்படுகிறது. கடந்த 18'ம் தேதி அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க'வில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று தன் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று வீடு வீடாக நடந்து சென்று தி.மு.க கட்சியில் சேர சொல்லி மக்களிடத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். நாடே கொரோனோ பரவல் தடுப்பை போர் வேகத்தில் செய்து கொண்டிருக்க மக்களை பற்றி சிந்திக்காமல் கட்சியை வளர்க்க உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.



Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News