"எங்கே இப்போ கருப்பு பலூன் பறக்க விடுங்களேன்!" - தி.மு.க'வை சீண்டும் ராதாரவி

பிரதமர் மோடி கடந்த முறை தமிழகம் வந்த போது "கோ பேக்" என்றார்கள் கருப்பு பலூன் பறக்க விட்டார்கள், எங்கே வரும் ஜனவரி 12'ம் தேதி அன்று தமிழகம் வரும்போது கருப்பு பலூன் பறக்க விடுவார்களா" என ஆளும் தி.மு.க அரசிற்கு பா.ஜ.க'வின் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ராதாரவி மதுரையில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பா.ஜ.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தற்பொழுது பா.ஜ.க'விற்கு தமிழகத்தில் 4 எம்.எல்.ஏ'க்கள் உள்ளனர், வரும் தேர்தலில் 80 எம்.எல்.ஏ'க்கள் இருப்பார்கள், பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டியதில்லை, வலிமையான எதிர்கட்சியாக இருந்தாலே போதும் பா.ஜ.க'வை கேட்டுதான் அப்போது ஆட்சியே நடக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "செந்தில்பாலாஜி'யை கைது செய்வோம் என கூறிய ஸ்டாலின்'தான் இப்பொழுது செந்தில் பாலாஜி'யை அமைச்சராக்கி அருகில் வைத்துள்ளார். பிரதமர் மோடி கடந்த முறை தமிழகம் வந்த போது "கோ பேக்" என்றார்கள், கருப்பு பலூன் பறக்க விட்டார்கள், எங்கே இப்போ வரும் ஜனவரி 12'ம் தேதி வருகிறார் இப்போ கருப்பு பலூன் பறக்க விடுவார்களா?" என பேசினார்.