டாஸ்மாக் பார் ஏலத்தில் முறைகேடு, அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு முன்பு போராட்டம்!
சமீபத்தில் நடந்து முடிந்த பார் ஏலத்தில் திமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக பல பார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் அனைத்திலும் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ., ஒருவர் காற்றாலை மின்சாரம் அமைக்கும் இடத்தில் வெளிப்படையாக சண்டையிட்ட காட்சியை அனைவரும் பார்த்திருப்போம். அது போன்று பலவற்றிலும் திமுகவினர் அராஜகம் செய்து வருகின்றனர்.
அதே போன்று பார் டெண்டர் விடுவதிலும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்துள்ளதாக, பார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Source, Image Courtesy: Facebook