Kathir News
Begin typing your search above and press return to search.

"முதல்வர் கேட்டா சமாளிச்சுக்கலாம்" - கூட்டம் நடத்திவிட்டு அலட்சியமாக பதில் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

முதல்வர் கேட்டா சமாளிச்சுக்கலாம் - கூட்டம் நடத்திவிட்டு அலட்சியமாக பதில் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2022 10:15 AM GMT

மயிலாடுதுறையில் கொரோனோ விதிகளை பின்பற்றாமல் கூட்டத்தை கூட்டிவிட்டு அலட்சியமாக "முதல்வர் கேட்டால் சமாளித்துகொள்வேன்" என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கொரோனோ அலை இந்தியாவில் மீண்டும் வீச துவங்கியுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனோ பரவல் தடுப்பு நடவடிக்கைகையாக ஊரடங்கு, கல்வி நிறுவனங்களை செயலபட தடை என பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்றே சுகாதாரத்துறை அமைச்சரே கொரோனோ மூன்றாம் அலை துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினோ மக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கெஞ்சாத குறையாக கேட்டு வருகிறார்.

இந்த சூழலில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டம் கூட்டியதுடன் அதனை அலட்சிய பதிலாக கூறிய தி.மு.க அமைச்சர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மயிலாடுதுறையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த கூட்டத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் ஏதுவும் மேற்கொள்ளபடாதது குறித்து கண்டுகொள்ளவில்லை. மாறா அவர் பேசியதாவது, "தமிழகத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கும் நிலையில் இப்படி இத்தனை பேர் கூடியுள்ள கூட்டத்தை பற்றி கண்டிப்பாக முதல்வர் கேட்பார். அப்படி கேட்டால் கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டமாக இருப்பதால் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இந்ந கூட்டத்தை கொரோனோ விழிப்புணர்வு கூட்டமாக நடத்தியதாக கூறி நான் தப்பித்துகொள்வேன்" என்றார் தி.மு.க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அதாவது நாடே கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கையில், கொரோனோ பரவல் குறித்து அச்சத்துடன் இருக்கையில் தி.மு.க'வில் அமைச்சராக இருக்கக்கூடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் கட்சி பணிக்களுக்காகவும், தன் பெயர் வெளியில் வரவேண்டும் எனவும் நடத்திய ஓர் நிகழ்ச்சியில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அச்சமின்றி இருந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் முதல்வரிடம் சமாளித்துவிடுவேன் என்கிறார். இதுபோன்ற சமாளிப்பு அமைச்சர்களை வைத்துகொண்டுதான் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறாரா?



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News