"பன்னியாக இல்லையா வன்னி?" - வி.சி.க பேச்சாளரை வறுத்தெடுத்த நாம் தமிழர் பேச்சாளர்!

By : Mohan Raj
"காவல்துறையே கையில் வச்சுருக்க ஸ்டாலினை அழைத்து விருதுகொடுத்துவிட்டு காவல்துறை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கு'ன்ன் புலம்புறீங்களே வன்னியரசு" என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு காழ்ப்புணர்ச்சி அரசியல் காரணமாக அதனை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். அதில் முக்கியமான பிரமுகராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு விமர்சித்து வந்தார். அதனை குறிப்பிடும் விதமாக காவல் துறையை "ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி" என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பும் விதமாக நீம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "காவல்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஸ்டாலினை அழைத்து அவருக்கு, 'அம்பேத்கர் சுடர்' விருது கொடுத்துவிட்டு, காவல்துறை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப் புலம்புவதெல்லாம் Funny ஆக இல்லையா மிஸ்டர் வன்னி? @VanniArasu_VCK" என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த. டிசம்பர் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரும் விழா எடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு "அம்பேத்கர் சுடர்" விருதை கோலாகலமாக அளித்தது குறிப்பிடதக்கது.
