உங்க ஆசிர்வாதம் வேண்டும் சார்! அமைச்சர் கையை பிடித்துக்கொண்ட புதிய போலீஸ் கமிஷ்னர்!
சென்னையில் புதிதாக ஆவடி, தாம்பரம் என்று இரண்டு காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. அதில் கமிஷ்னர்களாக முறைப்படி பொறுப்பேற்கின்ற விழா நடைபெற்றது. அதில் ஆவடி கமிஷ்னராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
By : Thangavelu

ஒரு காவல்துறை ஆணையர் புதுசா பதவியேற்குறார். லோக்கல் மந்திரி கையை புடிச்சு, உங்க ஆசிர்வாதம் வேணுமுன்னு சொல்றாருன்னா, இவர் மக்களுக்கு விசுவாசமா இருப்பாரா, மந்திரிக்கு விசுவாசமா இருப்பாரா ? @tnpoliceoffl pic.twitter.com/g4K5ZEndLr
— Savukku_Shankar (@savukku) January 3, 2022
அதே போன்று பால்வளத்துறை அமைச்சர் நாசரும் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அப்போது அமைச்சர் நாசரின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட கமிஷ்னர், உங்களின் ஆசிர்வாதம் தேவை சார் என்று குறிப்பிடுகிறார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு போலீஸ் கமிஷ்னராக இருப்பவர்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் வைத்து பார்க்க வேண்டும். அப்போதுதான் சட்டத்தின்படி சமமாக தெரியும்.
ஆனால் ஒரு போலீஸ் கமிஷ்னர் அமைச்சரின் ஆசிர்வாதம் வேண்டும் என்று கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஒரு காவல்துறை ஆணையர் புதுசா பதவியேற்குறார். லோக்கல் மந்திரி கையை புடிச்சு, உங்க ஆசிர்வாதம் வேணுமுன்னு சொல்றாருன்னா, இவர் மக்களுக்கு விசுவாசமா இருப்பாரா, மந்திரிக்கு விசுவாசமா இருப்பாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
Source, Image Courtesy: Twiter