தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? இன்று அவசர ஆலோசனை கூட்டம்!

By : Mohan Raj
கொரோனோ ஊரடங்கு தொடர்பான தமிழக அரசின் ஆலோசனைக்கு கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் மூன்றாவது அலையாக கொரோனோ வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வைரசான ஒமைக்கிரான் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் குறிப்பாக டெல்லி, கோவா, கேரளம் போன்றவை கல்வி நிலையங்கள், மக்கள் கூடும் சமுயாத இடங்கள் போன்றவைகளில் தடை விதித்துள்ளன. முக கவசமெ அணிவது கட்டாயத்தில் உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியது. இருப்பினும் கொரோனோ தொற்று தினமும் 30 சதவிகிதம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலை நீடித்தால் தொற்று பரவுவது மின்னல் வேகத்தில் துவங்கிவிடும்.
இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநில அரசுகளையும் மேற்கொள்ள அறிவுறித்தி கடந்த வாரமே மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்புகள் இயங்க வரும் 10'ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுதைய கொரோனோ தினசரி பாதிப்பு 1500 என்ற எண்ணிக்கையை தாண்டியதால் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட அலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகமாக்குவது குறித்தும், கொரோனோ பரவல் தீவிரமாகாமல் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்தில் 3'வது அலை துவங்கிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த வாரமே அறிவித்தது குறிப்பிடதக்கது.
