Kathir News
Begin typing your search above and press return to search.

"முருகன் விபூதியை வீசி பிள்ளையார் அடியில் வெடி வைத்தேன்" - இந்துமத உணர்வுகளை தூண்டும் வன்மமாக பேசிய ஆ.ராசா

முருகன் விபூதியை வீசி பிள்ளையார் அடியில் வெடி வைத்தேன் - இந்துமத உணர்வுகளை தூண்டும் வன்மமாக பேசிய ஆ.ராசா

Mohan RajBy : Mohan Raj

  |  4 Jan 2022 2:00 PM GMT

"விபூதி எல்லாத்தையும் தூக்கி போட்டு, பிள்ளையார் சிலைக்கு கீழே யானை வெடி வச்சேன் அது சிதறி வெடித்தது" என தான் இந்துமத அடையாளங்களை அழித்தது பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்பொழுதைய தி.மு.க எம்.பி'யுமான ஆ.ராசா.


தி.மு.க'வின் இந்து மத வெறுப்பு மக்கள் அறிந்ததே! இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூற மாட்டார்கள், இந்துக்களுக்கு மனது நோகும்படியான வார்த்தைகளை மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்வார்கள், யாராவது இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசினால் அவர்களை மேடை போட்டு பொன்னாடை போர்த்தி அழகு பார்ப்பார்கள், இந்துமத சின்னங்களான திருநீறு, குங்குமம் போன்றவற்றை கூட சம்பிரதாயமாக அணிவதை அருவருப்பாக நினைப்பார்கள். இந்த நிலையில் தி.மு.க கட்சியின் எம்.பி. ஆ.ராசா வழக்கம்போல் மீண்டும் இந்து மதத்தின் சின்னங்களை, வணங்கும் கடவுளை தான் சிறு வயதில் அவமதித்தது குறித்து பெருமையாக பெரியார் இயக்க விழாவில் கூறி கைத்தட்டல் வாங்கி இந்துக்களை புண்படுத்தியுள்ளார்.

பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஆனைமுத்து என்பவர் சமீபத்தில் இறந்தார். அவரின் படத்திறப்பு விழாவில் பேசி தி.மு.க'வின் ஆ.ராசா கூறியதாவது, "பூலோக ரீதியாக நானும் மறைந்த ஆனைமுத்துவும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 1973'ல் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து நான் அதில் படித்தேன். அப்பொழுது நான் வெளியில் கிளம்பும் போது என் அம்மா இது முருகன் விபூதி இதை வைத்துக்கொள் என தருவார்கள் நானும் வைத்துக்கொண்டேன். பின்னர் பெரியாரின் கடைசி உரையை கேட்டேன் தொடர்ந்து அவரின் புத்தகங்களை படித்தேன்.


அதன் பிறகு அந்த விபூதி எல்லாம் தூக்கி போட்டேன், தூக்கி போட்டது மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் இருக்கும் விநாயகர் சிலையின் கீழ் ஆனைவெடி வைத்தேன் அது வெடித்து சிதறியது. அதெல்லாம் ஒரு காலம். என் இந்த மாற்றத்திற்கு காரணம் பெரியாரின் கடைசி பேச்சு" என்றார்.



பெரியார் கழக விழாவில் இந்து மதத்தை நான் அவமதித்தேன் என திமிறாக கூறும் நபரைத்தான் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளராக வைத்துள்ளது.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News