Kathir News
Begin typing your search above and press return to search.

உச்சி பிள்ளையார் கோயிலில் பிறமதங்கள் குறித்து ஒளிபரப்பு: பா.ஜ.க அதிரடி!

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பாளையார் கோயிலில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து ஒளிபரப்பு செய்தததை கண்டிக்கும் பாஜகவினர் நேற்று (ஜனவரி 5) நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

உச்சி பிள்ளையார் கோயிலில் பிறமதங்கள் குறித்து ஒளிபரப்பு: பா.ஜ.க அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  6 Jan 2022 11:35 AM GMT

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பாளையார் கோயிலில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து ஒளிபரப்பு செய்தததை கண்டிக்கும் பாஜகவினர் நேற்று (ஜனவரி 5) நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்ட திட்டத்தில் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. இதனை காண்பதற்காக சிறுவர்களும் ஆர்வமுடன் கோயிலுக்கு வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றிய குறும்படங்கள் நேற்று இரவு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே சமயம் பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் பற்றியும் ஒளிபரப்பியுள்ளனர். இது இந்துக்களை அதிர்ச்சியடைய செய்தது. இது பற்றிய தகவல் தீயாக பரவியதும், திருச்சி மாவட்டத் பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையிலான கட்சியினர் பலர் திரண்டு நந்தி கோயில் தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மலைக்கோட்டை போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரமாக மறியல் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Source: Dinamani

Image Courtesy:India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News